தமிழக செய்திகள்

பள்ளி மேலாண்மை குழு பயிற்சி முகாம்

செங்கோட்டை நகராட்சியில் பள்ளி மேலாண்மை குழு பயிற்சி முகாம் நடந்தது.

செங்கோட்டை:

செங்கோட்டை நகராட்சி கூட்ட அரங்கில் செங்கோட்டை வட்டார பள்ளி மேலாண்மை குழு பயிற்சி வகுப்பு நடந்தது. நிகழ்ச்சிக்கு நகர்மன்ற தலைவா ராமலட்சுமி தலைமை தாங்கினார். வடகரை பேரூராட்சி மன்றத்தலைவா ஷேக்தாவூது, பண்பொழி பேரூராட்சி மன்றத்தலைவா ராஜராஜன், வட்டார வளர்ச்சி அலுவலா மாயவநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனா. வட்டார வள மைய மேற்பார்வையாளர் சுகந்தி, சுப்புலெட்சுமி ஆகியோர் வரவேற்றனர்.

பயிற்சி வகுப்பில் செங்கோட்டை, புதூர், வடகரை, பண்பொழி கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். ஆசிரியர் பயிற்றுநர் சுந்தரரேஸ்வரி, சமுதாய அமைப்பாளர்கள் மனோகர், மாரியம்மாள் கருத்தாளர்களாக செயல்பட்டனர். பயிற்சியில் பங்கு பெற்றவர்களுக்கு எழுது பொருட்கள், பயிற்சி கையேடு, தேனீர், சிற்றுண்டி, மதிய உணவு வழங்கப்பட்டது. ஆசிரியர் பயிற்றுர் சுகந்தி நன்றி கூறினார்.