தமிழக செய்திகள்

பள்ளி மேலாண்மை குழு பயிற்சி வகுப்பு

பள்ளி மேலாண்மை குழு பயிற்சி வகுப்பு நடைபெற்றது.

தினத்தந்தி

சிவகாசி, 

விருதுநகர் மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி துறை சார்பில் சிவகாசி மாநகராட்சி அலுவலகத்தில் கவுன்சிலர்களுக்கு நகர்புற உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கான பள்ளி மேலாண்மைக்குழு பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இதில் மேயர் சங்கீதா இன்பம், துணை மேயர் விக்னேஷ்பிரியா காளிராஜன், வட்டார கல்வி அலுவலர்கள் திருப்பதி, ஞானக்கனி, வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள் கவிதா, லட்சுமி, தலைமையாசிரியர் தேவராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். பயிற்சி வகுப்பில் வட்டார கல்வி அலுவலர் திருப்பதி, குழந்தைகளுக்கான இலவச கட்டாய கல்வி உரிமைச்சட்டம், பள்ளி மேலாண்மைக் குழு செயல்பாடுகள், குழந்தைகளின் உரிமைகள், பள்ளியின் வளர்ச்சி, குழந்தைகளின் பாதுகாப்பு, பள்ளியில் கட்டமைக்கப்பட்டுள்ள பள்ளி மேலாண்மை குழுவில் நகர்புற உள்ளாட்சி பிரதிநிதிகளின் பங்கு ஆகியவை குறித்து பேசினார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து