பந்தலூர்
பந்தலூர் அருகே பிதிர்காடு பஜார் பகுதியை சேர்ந்தவர் உஸ்மான். இவரது மகன் ராசின். இவர் பிதிர்காடு அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார். அவர் போதைப்பொருளுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பிதிர்காட்டில் சைக்கிள் பயணத்தை தொடங்கினார். தொடர்ந்து பிதிர்காடு, முக்கட்டி, உப்பட்டி வழியாக பந்தலூருக்கு சைக்கிளில் பயணமாக வந்தார். அந்த மாணவரை பந்தலூரில் வியாபாரிகள் சங்க தலைவர் அசரப் மற்றும் வியாபாரிகள், பொதுமக்கள் வரவேற்று பாராட்டி பேசினர்.