தமிழக செய்திகள்

லாரி மோதி பள்ளி மாணவி சாவு

லாரி மோதி பள்ளி மாணவி சாவு

சூளகிரி:

சூளகிரி தாலுகா எர்ரண்டப்பள்ளியை சேர்ந்தவர் பச்சியப்பா. இவருடைய மகள் அமராவதி (வயது 15). இவர் எர்ரண்டப்பள்ளி அரசு உயர்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். சம்பவத்தன்று இவரும், அதே பகுதியை சேர்ந்த ரோஜா (21) என்பவரும் மோட்டார் சைக்கிளில் கிருஷ்ணகிரி -ஓசூர் சாலையில் கொல்லப்பள்ளி அருகில் சென்று கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை உறவினர் ஒருவர் ஓட்டிச் சென்றார். அப்போது, அந்த வழியாக வந்த லாரி ஒன்று மோட்டார்சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அமராவதி, கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார். ரோஜா படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார். அவர்களது உறவினர் காயமின்றி தப்பினார். இந்த விபத்து குறித்து சூளகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரியை பறிமுதல் சய்தனர். தப்பி ஓடிய டிரைவரை தேடி வருகின்றனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்