தமிழக செய்திகள்

பள்ளி மாணவன் திடீர் சாவு

பள்ளி மாணவன் திடீரென பாதாபமாக இறந்தான்.

சிவகாசி, 

சிவகாசி ராஜதுரை நகரை சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மகன் சிவகிரி (வயது 16). இவர் சித்துராஜபுரம் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தான். சம்பவத்தன்று வீட்டில் உள்ள கழிப்பறைக்கு சென்றார். அப்போது எதிர்பாராமல் கழிப்பறையில் வழுக்கி விழுந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் சிவகிரியின் தலையில் காயம் ஏற்பட்டது. உடனே அவரை மீட்டு சிவகாசியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

அங்கு சிகிச்சை பெற்று வீடு திரும்பிய சிறுவனுக்கு மீண்டும் தலையில் வலி ஏற்பட்டதால் மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிறுவன் சிவகிரி சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சிறுவனின் தாய் மகேஸ்வரி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.