தமிழக செய்திகள்

மங்கலம்பேட்டை அருகேபள்ளி மாணவன் தூக்குப்போட்டு தற்கொலைசெல்போனில் கேம் விளையாடியதை தந்தை கண்டித்ததால் விபரீத முடிவு

மங்கலம்பேட்டை அருகே செல்போனில் கேம் விளையாடியதை தந்தை கண்டித்ததால் பள்ளி மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டான்.

மங்கலம்பேட்டை,

மங்கலம்பேட்டை அருகே உள்ள விசலூர் கிராமத்தை சேர்ந்தவர் பாஸ்கரன் (வயது 47). விவசாயி. இவரது மகன் தமிழேந்தி (வயது 15). இவன் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 9-ம் படித்து வந்தான்.

தற்போது கோடை விடுமுறையில் வீட்டில் இருந்த தமிழேந்தி செல்போன் வைத்து, அதில் கேம்ஸ் விளையாடி கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதை பார்த்த, பாஸ்கரன், தமிழேந்தியை கண்டித்துள்ளார்.

தூக்கில் தொங்கினார்

பின்னர், அவர் மங்கலம்பேட்டைக்கு சென்றுவிட்டார். சிறிது நேரத்துக்கு பின்னர், அவர் திரும்பி வந்து பார்த்த போது அங்கு, வீட்டுக் கூரையின் மூங்கில் சாரத்தில், தமிழேந்தி சேலையால் தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்துள்ளான்.

இதை பார்த்ததும், பதறிப்போன பாஸ்கரன், தனது மகனை மீட்டு, சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தார். பின்னர், மேல் சிகிச்சைக்காக விழுப்புரம், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

ஆனால், அங்கு, சிகிச்சை பலனளிக்காமல் தமிழேந்தி பரிதாபமாக உயிரிழந்தான். இந்த சம்பவம் குறித்து, மங்கலம்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். இ ந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...