தமிழக செய்திகள்

ஆற்றுப்பாலத்தில் பள்ளி மாணவர்கள் யோகாசனம்

ஆற்றுப்பாலத்தில் பள்ளி மாணவர்கள் யோகாசனம் செய்தனர்.

தினத்தந்தி

ஆலங்குளம்:

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு கல்லிடைக்குறிச்சி தாமிரபரணி ஆற்று பாலத்தில் ஸ்டஅக் பள்ளி மாணவர்கள் யோகாசனம் செய்தனர். பள்ளி ஆசிரியர்கள் லிங்கேஸ்வரி மற்றும் ஜான்சன் ஆகியோர் தொகுத்து வழங்கினர். பள்ளி நிறுவனர் முருகன் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார். கல்லிடைக்குறிச்சி பேரூராட்சி தலைவர் இசக்கி பாண்டியன், யோகா பயிற்சியாளர் கிருபா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். பள்ளி உடற்பயிற்சி ஆசிரியர்களின் வழிகாட்டுதலின் படி மாணவர்கள் அனைவரும் யோகாசனம் செய்தனர். பள்ளி முதல்வர் பிரவின்குமார் யோகாசனம் செய்த மாணவர்கள், பயிற்றுவித்த ஆசிரியர்கள், பாதுகாப்பு வழங்கிய காவல் துறையினர் மற்றும் பேரூராட்சி மன்ற ஊழியர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து