கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

பாலியல் புகாரில் கைதான சிவசங்கர் பாபாவின் பள்ளி ஆசிரியைகள் தலைமறைவு

பாலியல் புகாரில் கைதான சிவசங்கர் பாபாவின் பள்ளி ஆசிரியைகள் தலைமறைவாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தினத்தந்தி

சென்னை,

சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் ஸ்ரீ சுஷில் ஹரி இன்டர்நேஷனல் பள்ளியை நடத்தி வந்த சிவசங்கர் பாபா மீது அந்த பள்ளியின் முன்னாள் மாணவிகள் பாலியல் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் சிவசங்கர் பாபா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இவர் மீது 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

ஏற்கனவே சிபிசிஐடி பேலீசார் இவரை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்த நிலையில் 2 வது வழக்கில் செங்கல்பட்டில் உள்ள பேக்சே நீதிமன்றத்தில் கடந்த 2 தினங்களுக்கு முன் சிவசங்கர் பாபா ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது மனுவை விசாரித்த நீதிபதி தமிழரசி, சிவசங்கர் பாபாவை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிட்டார்.

சிறையில் இருக்கும் சிவசங்கர் பாபா மீது மேலும் ஆதாரங்களை திரட்ட சிபிசிஐடி தீவிரம் காட்டி வரும்நிலையில், சிவசங்கர் பாபாவின் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியைகள், ஊழியர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரிக்க சிபிசிஐடி முடிவு செய்தது. அதில் முதற்கட்டமாக சிவசங்கர் பாபா பள்ளியில் பணியாற்றும் 5 ஆசிரியைகளுக்கு சம்மன் அனுப்ப முடிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் பாலியல் புகாரில் கைதான சிவசங்கர் பாபாவுக்கு உதவி செய்ததாக கூறப்படும் பள்ளி ஆசிரியைகள் தலைமறைவாகி உள்ளனர். சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பி இருந்தநிலையில் வீட்டை பூட்டிவிட்டு தப்பியோடிய விட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு