தமிழக செய்திகள்

சென்னையின் நாளை வாக்குப்பதிவு நடக்கும் பள்ளிகளுக்கு விடுமுறை- ககன்தீப் சிங் பேடி தகவல்

வாக்குச்சாவடி அமைந்துள்ள 2 பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தினத்தந்தி

சென்னை,

பெருநகர சென்னை மாநகராட்சியின் வார்டு 51-க்கு உட்பட்ட வாக்குச்சாவடி 1,174 மற்றும் வார்டு 179-க்கு உட்பட்ட வாக்குச்சாவடி 5,059-க்கும் நாளை (திங்கட்கிழமை) மறுவாக்குப்பதிவு நடத்த மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இதையடுத்து இந்த வாக்குச்சாவடி அமைந்துள்ள 2 பள்ளிகளுக்கும் நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான ககன்தீப் சிங் பேடி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

பெருநகர சென்னை மாநகராட்சியின் வார்டு 51-க்கு உட்பட்ட வாக்குச்சாவடி 1,174 மற்றும் வார்டு 179-க்கு உட்பட்ட வாக்குச்சாவடி 5,059- க்கும் நாளை மறுவாக்குப்பதிவு நடக்க உள்ளது.

இதையடுத்து இந்த 2 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ள வண்ணாரப்பேட்டை கிழக்கு கல்லறை சாலையில் உள்ள சென்னை உருது பள்ளி மற்றும் பெசன்ட் நகர் அஷ்டலட்சுமி கார்டன் பகுதியில் உள்ள அரசு தொடக்கப் பள்ளிக்கும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு