தமிழக செய்திகள்

தமிழகத்தில் பள்ளிகள் எப்போது திறக்க வாய்ப்பு உள்ளது? - பள்ளிக் கல்வித்துறை பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

கொரோனா அச்சுறுத்தலால் கடந்த மார்ச் மாதம் மூடப்பட்ட பள்ளிகள் இன்னும் திறக்கப்படவில்லை.

தினத்தந்தி

சென்னை,

கொரோனா அச்சுறுத்தலால் கடந்த மார்ச் மாதம் மூடப்பட்ட பள்ளிகள் இன்னும் திறக்கப்படவில்லை. இதனிடையே மாணவர்களின் பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டு, ஆன்லைன் வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதால் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்கிற எதிர்பார்ப்பு பெற்றோர்களிடையே நிலவி வருகிறது.

இந்த நிலையில் பள்ளிகள் திறப்பு தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள் இந்த ஆண்டு இறுதிக்குள் பள்ளிகளை திறக்க வாய்ப்பு இருக்கிறதா என கேள்வி எழுப்பினர். மேலும் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்பது குறித்து நவம்பர் 11ம் தேதி பதிலளிக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்