தமிழக செய்திகள்

தீபாவளி பண்டிகையையொட்டி பள்ளிகளுக்கு நாளை மறுநாளும் விடுமுறை

தீபாவளி பண்டிகையையொட்டி பள்ளிகளுக்கு நாளை மறுநாளும் விடுமுறை கல்வித்துறை ஆணையர் அறிவிப்பு.

தினத்தந்தி

சென்னை,

தீபாவளி பண்டிகை இன்று (வியாழக்கிழமை) கொண்டாடப்படுகிறது. பண்டிகையை சொந்த ஊர்களுக்கு சென்று கொண்டாடிவிட்டு திரும்புவதற்கு ஏதுவாக நாளையும் (வெள்ளிக்கிழமை) உள்ளூர் விடுமுறையை அரசு அறிவித்தது. அதன் தொடர்ச்சியாக தற்போது பள்ளிகளுக்கு நாளை மறுதினமும் (சனிக்கிழமை) விடுமுறை அளித்து கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது. இதுதொடர்பாக பள்ளிக்கல்வி ஆணையர், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தீபாவளி பண்டிகையையொட்டி 5-ந் தேதி (நாளை) தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பல்வேறு ஆசிரியர் சங்கங்களிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கைகளின் அடிப்படையில் 6-ந் தேதியும் (நாளை மறுதினம்) அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை வழங்கி ஆணையிடப்படுகிறது.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது