தமிழக செய்திகள்

பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற பிளஸ்-1 மாணவர்களுக்கான மதிப்பெண் பட்டியல்; பள்ளிகளில் நாளை முதல் பெறலாம்

பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற பிளஸ்-1 மாணவர்களுக்கான மதிப்பெண் பட்டியலை பள்ளிகளில் நாளை முதல் பெறலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தினத்தந்தி

அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

கடந்த மார்ச் 2021-ல் பிளஸ்-1 பொதுத் தேர்வில் தேர்சி பெற்ற பள்ளி மாணவர்கள், தாங்கள் படித்த பள்ளியில் தலைமை ஆசிரியர் வாயிலாக வருகிற 30-ந்தேதி (நாளை) பிற்பகல் 1 மணி முதல் இணையதளம் வழியாக பதிவிறக்கம் செய்யப்பட்ட தங்களுடைய மதிப்பெண் பட்டியலை பெற்று கொள்ளலாம். இணையதளம் வாயிலாக பதிவிறக்கம் செய்யப்பட்ட மதிப்பெண் பட்டியலில் சம்பந்தப்பட்ட பள்ளியின் தலைமை ஆசிரியர் கையெழுத்திட்டு இருந்தால் மட்டுமே அந்த மதிப்பெண் பட்டியல் செல்லும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதேபோல், மற்றொரு செய்திக்குறிப்பில், பிளஸ்-2 துணைத்தேர்வு எழுதி விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்தவர்கள் வருகிற 1-ந்தேதி காலை 11 மணி முதல் 5-ந்தேதி வரையில் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். அதனைத் தொடர்ந்து மறுகூட்டல், மறுமதிப்பீட்டுக்கு 4-ந்தேதி காலை 10 மணி முதல் 5-ந்தேதி மாலை 5 மணிக்குள் அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில் உரிய கட்டணத்துடன் விண்ணப்பப் படிவத்தினை பூர்த்தி செய்து ஒப்படைக்க வேண்டும்' என்று கூறப்பட்டு இருக்கிறது.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்