தமிழக செய்திகள்

திருத்தணி அருகே சாரணியர் பயிற்சி முகாம்

திருத்தணியில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் சாரணிய துவக்குனர் பயிற்சி முகாம் நடைபெற்றது.

தினத்தந்தி

இம்முகாமுக்கு சாரணிய மாவட்ட செயலாளர் டாக்டர். ஜெ.ஒய்.ஜேம்ஸ் ஜெயராஜ் தலைமை தாங்கினார். முகாமில் திருத்தணி, திருவாலங்காடு, ஆர்.கே பேட்டை, மற்றும் பள்ளிப்பட்டு போன்ற பகுதிகளை சார்ந்த அரசு மற்றும் அரசு உதவி பெறும் மற்றும் அனைத்து வகை தனியார் பள்ளிகளில் இருந்து 100-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கு பெற்றனர். இச்சிறப்பு பயிற்சி முகாமின் மூலமாக 50-க்கும் மேற்பட்ட புதிய சாரண சாரணியப் படை பிரிவுகள் பதிவு செய்யப்பட்டது.

முகாமில் திருவள்ளூர் மாவட்ட கல்வி அலுவலர் சுகானந்தம், தனியார் பள்ளிகளின் மாவட்ட கல்வி அலுவலர் சிவதாஸ், பள்ளி ஆய்வாளர் சௌத்திரி உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர். மேலும் திருத்தணி சாரணிய மாவட்ட முதன்மை பொறுப்பாளர்கள் பாரதி, சீனிவாசன், முருகன், ஜெயச்சந்திரன், தாமோதரன் மற்றும் அனைத்து செயற்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முகமின் இறுதியில் சாரணிய துவக்குனர்களுக்கு சான்றிதழ்கள் அளிக்கப்பட்டது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து