தமிழக செய்திகள்

முன்விரோதத்தில் வாலிபருக்கு கத்திக்குத்து

ஓட்டேரி அருகே முன்விரோதத்தில் வாலிபரை கத்தியால் குத்திய 4 பேர் கொண்ட கும்பலை போலீசார் தேடிவருகின்றனர்.

தினத்தந்தி

ஓட்டேரி அடுத்த எஸ்.வி.எம். நகர் பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ் என்ற அலெக்ஸ் (வயது 22). நேற்று மாலை அதே பகுதியில் நடந்து சென்று கொண்டு இருந்தவரை 4 பேர் கொண்ட கும்பல் கத்தியால் சரமாரியாக குத்தி விட்டு தப்பினர். தகவலறிந்த தலைமைச் செயலக காலனி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து அவரை மீட்டு சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதல்கட்ட விசாரணையில் கடந்த மாதம் 23-ந் தேதி அதே பகுதியில் உள்ள மாதா கோவில் தேராட்டத்தில் ஏற்பட்ட முன் விரோதம் காரணமாக விக்னேஷ் தாக்கப்பட்டது தெரியவந்தது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து