தமிழக செய்திகள்

முதியவருக்கு அரிவாள் வெட்டு: வாலிபர் கைது

போடியில் முதியவரை அரிவாளால் வெட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

தினத்தந்தி

போடி கருப்பசாமி கோவில் தெருவைச் சேர்ந்தவர் தீபாவளிராஜ் (வயது 60). இவரது மைத்துனர் சுதாகர் (32). இவர்கள் இருவருக்கும் இடையே பணம் கொடுக்கல்-வாங்கல் தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று மதியம் போடி அருகே உள்ள வினோபாஜி காலனி பகுதியில் தீபாவளிராஜ் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த சுதாகர், அவரை வழிமறித்து கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

மேலும் சுதாகர் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் வெட்ட முயன்றார். அப்போது அதை தடுக்க முயன்ற தீபாவளிராஜீக்கு 2 கைகளிலும் வெட்டு விழுந்தது. இதில் படுகாயமடைந்த அவர் தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து அவர் போடி நகர் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுதாகரை கைது செய்தனர். 

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு