தமிழக செய்திகள்

தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு; 2 வாலிபர்கள் கைது

வாலிபர்கள் 2 பேர் கூலித்தொழிலாளிடம் வாக்குவாதம் செய்து அவரை அரிவாளால் தாக்கியதாக கூறப்படுகிறது.

தினத்தந்தி

கும்மிடிப்பூண்டி அடுத்த கவரைப்பேட்டை அருகே உள்ளது பெரவள்ளூர் கிராமம். இங்கு உள்ள வயல்வெளியில் ஆந்திராவில் இருந்து வந்த கூலித் தொழிலாளி வெங்கடேசலு (வயது 40) என்பவர் நேற்று முன்தினம் நெல் நடவு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது, அதே கிராமத்தை சேர்ந்த வாலிபர்கள் விஜய் (19) மற்றும் சிவகுமார் (20) ஆகிய 2 பேர் கூலித்தொழிலாளி வெங்கடேசலுவிடம் வாக்குவாதம் செய்து அவரை அரிவாளால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

இதுகுறித்து கவரைப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து கூலித்தொழிலாளியை தாக்கிய 2 வாலிபர்களையும் கைது செய்தனர்.

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு