தமிழக செய்திகள்

எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டம்

களக்காட்டில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

களக்காடு:

களக்காடு புதிய பஸ் நிலையம் எதிரில் அமைந்துள்ள கட்டிட ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி பலமுறை மனுக்கள் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காத நகராட்சியை கண்டித்தும், களக்காடு நகராட்சிக்கு உட்பட்ட 27 வார்டுகளிலும் தாமிரபரணி கூட்டு குடிநீர் வழங்க நகரசபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் களக்காட்டில் எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்துக்கு நகர தலைவர் கமாலுதீன் தலைமை தாங்கினார். துணை தலைவர் கபீர், இணை செயலாளர் ரபிக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் நெல்லை புறநகர் மாவட்ட பொதுச்செயலாளர் களந்தை மீராசா, வர்த்தகர் அணி மாவட்ட துணைத்தலைவர் பீமாஸ் உசேன் உள்பட திரளானவர்கள் கலந்து கொண்டு கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். அரிப் பைஜி தொகுத்து வழங்கினார். நகர செயலாளர் காஜா முகைதீன் நன்றி கூறினார்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...