தமிழக செய்திகள்

சென்னையில் கடந்த ஒரு மாதத்தில் 55 மசாஜ் சென்டர்களுக்கு சீல் - காவல்துறை நடவடிக்கை

சட்டவிரோதமாக இயங்கி வந்த 55 ஸ்பா மற்றும் மசாஜ் சென்டர்களூக்கு போலீசார் சீல் வைத்துள்ளனர்.

தினத்தந்தி

சென்னை,

சென்னை பெருநகர காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மசாஜ் சென்டர் என்ற பெயரில் சட்டவிரோதமாக இயங்கி வந்த 55 ஸ்பாக்களுக்கு கடந்த ஒரு மாதத்தில் காவல்துறையினர் சீல் வைத்து நடவடிக்கை எடுத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட கோயம்பேடு, அண்ணாநகர், திருமங்கலம் ஆகிய பகுதியில் உரிமம் இல்லாமல் சட்டவிரோதமாக ஸ்பாக்கள் இயங்கி வருவதாகவும், ஸ்பா என்ற பெயரில் மசாஜ் மற்றும் பாலியல் தொழில் நடைபெற்று வருவதாகவும் போலீசாருக்கு தகவல்கள் கிடைத்துள்ளன.

இதன் அடிப்படையில் சென்னை காவல்துறையின் தனிப்படை போலீசார் கோயம்பேடு, அண்ணாநகர் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையின்போது சென்னை பெருநகர காவல்துறை மற்றும் மாநகராட்சி நிர்வாகத்திடம் உரிய அனுமதி பெறாமல் சட்டவிரோதமாக இயங்கி வந்த 55 ஸ்பா மற்றும் மசாஜ் சென்டர்களுக்கு சீல் வைத்து, அதன் உரிமையாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு

காரைக்காலில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை