தமிழக செய்திகள்

கோவிலுக்கு சொந்தமான இடத்தில் உள்ள கட்டிடத்துக்கு சீல்

உளுந்தூர்பேட்டை சுப்பிரமணியசுவாமி கோவிலுக்கு சொந்தமான இடத்தில் உள்ள கட்டிடத்துக்கு சீல் இந்துசமய அறநிலைய துறையினர் நடவடிக்கை

தினத்தந்தி

உளுந்தூர்பேட்டை

உளுந்தூர்பேட்டையில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சொந்தமான இடத்தை நலத்தம்பி என்பவர் கடந்த 1962-ம் ஆண்டு 50 ஆண்டு காலத்துக்கு குத்தகைக்கு எடுத்தார். இந்த ஒப்பந்தம் 2013-ம் ஆண்டே முடிந்து விட்டதால் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் உள்ள கட்டிடத்தை காலி செய்ய சொல்லி இந்து சமயஅறநிலையத்துறை அதிகாரிகள் நலத்தம்பிக்கு உத்தரவிட்டனர்.

பின்னர் இந்த உத்தரவை எதிர்த்து கால அவகாசம் கேட்டு நலத்தம்பி தாக்கல் செய்த மனுவையும் கோர்ட்டு தள்ளுபடி செய்துவிட்டது. இதையடுத்து நேற்று இந்துசமய அறநிலையத்துறை அதிகாரி தலைமையில் வருவாய் மற்றும் காவல் துறை அதிகாரிகள் முன்னிலையில் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் இருந்த கட்டிடத்தை பூட்டி சீல் வைத்து இந்துசமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது.

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்