தமிழக செய்திகள்

பட்டாசு கடைக்கு சீல் வைப்பு

அய்யம்பேட்டை அருகே பட்டாசு கடைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

தினத்தந்தி

அய்யம்பேட்டை;

கடந்த சில நாட்களாக தமிழகத்தில் ஆங்காங்கே பட்டாசு கடைகளில் விபத்துக்கள் ஏற்பட்டு பெருமளவில் உயிரிழப்புகள் ஏற்பட்டது. இதையடுத்து தமிழகம் முழுவதும் அதிகாரிகள் பட்டாசு தயாரிக்கும் கடைகளில் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். இந்தநிலையில் அய்யம்பேட்டை பகுதியில் உள்ள வெடிக்கடைகளில் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். தஞ்சை தாசில்தார் சக்திவேல், பாபநாசம் துணை போலீஸ் சூப்பிரண்டு பூரணி, அய்யம்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஐஸ்வர்யா, வருவாய் அலுவலர் சரவணகுமார் ஆகியோர் வெடிக்கடைகளில் சோதனை செய்தனர்.இதில் அய்யம்பேட்டை அருகே தண்டாங்கோரை அக்ரஹாரம் தெருவில் உள்ள அன்பழகன் என்பவருக்கு சொந்தமான ஒரு பட்டாசுகடையில் அதிகாரிகள் சோதனை செய்தனர். சோதனையின் போது அந்த கடையில் பட்டாசு தயாரிப்பதற்கான உரிமம் புதுப்பிக்கப்படாமல் இருப்பதை கண்டறிந்த அதிகாரிகள், பட்டாசு தயாரிக்க அளவுக்கு அதிகமாக பதுக்கி வைத்திருந்த அலுமினிய துகள்கள் உள்ளிட்ட வெடி பொருட்களை பறிமுதல் செய்து அந்த கடைக்கு சீல் வைத்தனர்.

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு

காரைக்காலில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை