தமிழக செய்திகள்

தர்மபுரியில்ரெயில் மோதி வங்கி காவலாளி பலி

தர்மபுரியில் ரெயில் மோதி வங்கி காவலாளி பலியானார்

தினத்தந்தி

தர்மபுரி அருகே உள்ள மிட்டாரெட்டி அள்ளி கிராமத்தை சேர்ந்தவர் லூயிஸ் குமார் (வயது 26). வெண்ணாம்பட்டி பகுதியில் உள்ள ஒரு வங்கியில் காவலாளியாக தற்காலிக அடிப்படையில் பணிபுரிந்து வந்தார். இவர் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு அருகே ரெயில் தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த ஒரு ரெயில் அவர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவரை மீட்டு ஆம்புலன்சில் தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து தர்மபுரி ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோதண்டபாணி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து