தமிழக செய்திகள்

வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்- தமிழக வருவாய் நிர்வாக ஆணையர் தகவல்

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பெய்து வருவதை முன்னிட்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்படடு வருவதாக தமிழக வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை விலகியுள்ள நிலையில், அதிக மழைப்பொழிவை கொடுக்கும் வடகிழக்கு பருவமழை நேற்று துவங்கியது. இதன் காரணமாக தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.

அடுத்த சில நாட்களுக்கு தமிழகத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து தமிழகம் முழுவதும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தமிழக வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழையால் 4399 இடங்களில் பாதிப்பு ஏற்படும் என்று கண்டறியப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மக்களை தங்கவைப்பதற்காக தமிழகம் முழுவதும் 7,327 தற்காலிக முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய மழை பெய்யும் சமயங்களில் பொதுமக்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று அனைத்து அரசு துறை அதிகாரிகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்