திருவொற்றியூர்,
திருவொற்றியூர் தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், எண்ணூர், நெட்டுகுப்பம், சின்னகுப்பம், உலகநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் பிரசாரத்தில் ஈடுபட்டார். மீன் கடைகளுக்கு சென்று மீனவர்கள், மீனவ பெண்களிடம் விவசாய சின்னம் பொறிக்கப்பட்ட துண்டு பிரசுரங்களை கொடுத்து வாக்கு சேகரித்தார்.
பின்னர் நிருபர்களிடம் சீமான் கூறும்போது, காமராஜர் துறைமுகம் அரசு துறைமுகமாக இருந்த வரை எவ்வித பிரச்சினையும் ஏற்படவில்லை. தனியாருக்கு ஒப்படைத்த பின்பு 6 ஆயிரத்து 124 ஏக்கர் நிலம் விரிவாக்கம் செய்யப்பட்டது. காமராஜர், வ.உ.சி. பெயரில் இருக்கும் துறைமுகங்களை பெயர் மாற்றம் செய்து வருகிறார்கள். தனியார் முதலாளிகள் மீனவ மக்கள் மீது அக்கறை இல்லாமல் செயல்படுகின்றனர். எண்ணூரில் அடிப்படைத்தேவைகள் எதுவும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை என்றார்.