தமிழக செய்திகள்

காரில் கடத்திய 150 லிட்டர் சாராயம் பறிமுதல்

கல்வராயன்மலையில் இருந்து கள்ளக்குறிச்சிக்கு காரில் கடத்திய 150 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இதுதொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

தினத்தந்தி

கச்சிராயப்பாளையம்

கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலையில் உள்ள வெள்ளிமலையில் இருந்து கல்வராயன்மலை அடிவாரம் நோக்கி காரில் சாராயம் கடத்தி செல்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் கரியாலூர் சப்-இன்ஸ்பெக்டர் சேகர், தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் ராமலிங்கம் மற்றும் போலீசார் வெள்ளிமலை முருகன் கோவில் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த காரை போலீசார் வழிமறித்தனர்.

உடனே காரில் இருந்த ஒருவர் தப்பி ஓடி தலைமறைவாகி விட்டார். இதையடுத்து காரில் இருந்த 2 பேரை மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தியதில், அவர்கள் கள்ளக்குறிச்சி ஜே.ஜே.நகர் பகுதியை சேர்ந்த செந்தில்குமார், முத்து என்பதும், தப்பி ஓடியது கொட்டபுத்தூர் கிராமத்தை சேர்ந்த ஏழுமலை என்றும், கல்வராயன்மலை பகுதியில் இருந்து கள்ளக்குறிச்சிக்கு காரில் 150 லிட்டர் சாராயம் கடத்தி சென்றதும் தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து செந்தில்குமார், முத்து ஆகியோரை கைது செய்ததுடன், அவர்களிடம் இருந்து காருடன் 150 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர். மேலும் தப்பி ஓடிய ஏழுமலையை போலீசார் தேடி வருகின்றனர்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு