தமிழக செய்திகள்

மண் அள்ளிய பொக்லைன் எந்திரம் பறிமுதல்

நாட்டறம்பள்ளி அருகே மண் அள்ளிய பொக்லைன் எந்திரம் பறிமுதல் செய்யப்பட்டது.

தினத்தந்தி

ஜோலார்பேட்டை

திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளியை அடுத்த கொத்தூர் கிராமம் கள்ளியூர் பகுதியில் தனியார் மற்றும் அரசுக்கு சொந்தமான இடங்களில் பொக்லைன் எந்திரம் மூலம் பள்ளம் தோண்டி டிப்பர் லாரியில் சிலர் மண் அள்ளி கடத்துவதாக திருப்பத்தூர் சப்-கலெக்டருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து சப்-கலெக்டர் லட்சுமி உத்தரவுபடி நாட்டறம்பள்ளி தாசில்தார் (பொறுப்பு) சுமதி தலைமையில் வருவாய் ஆய்வாளர் நந்தினி, கொத்தூர் கிராம நிர்வாக அலுவலர் சரவணன் மற்றும் வருவாய்த்துறையினர் கள்ளியூர் பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர்.

அங்கு அரசுக்கு சொந்தமான இடத்தில் மண் அள்ளி கொண்டிருந்த டிப்பர் லாரி டிரைவரும், பொக்லைன் டிரைவரும் அதிகாரிகளை கண்டதும் மண் கடத்தலுக்கு பயன்படுத்திய டிப்பர் லாரியோடு தப்பி சென்றனர். மண் அள்ள பயன்படுத்திய பொக்லைன் எந்திரந்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து நாட்டறம்பள்ளி போலீசில் ஒப்படைத்தனர்.

இதுகுறித்து நாட்டறம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி மற்றும் போலீசார் டிப்பர் லாரி டிரைவர், பொக்லைன் டிரைவர் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்