தமிழக செய்திகள்

கேரளாவுக்கு கடத்த முயன்ற மண்எண்ணெய் பறிமுதல்

கொல்லங்கோடு அருகே கேரளாவுக்கு கடத்த முயன்ற மண்எண்ணெய் பறிமுதல் செய்யப்பட்டது.

தினத்தந்தி

கொல்லங்கோடு:

கொல்லங்கோடு அருகே கேரளாவுக்கு கடத்த முயன்ற மண்எண்ணெய் பறிமுதல் செய்யப்பட்டது.

கிள்ளியூர் வட்ட வழங்கல் அலுவலர் வேணுகோபால், முதுநிலை வருவாய் ஆய்வாளர் அலெக்ஸ் ஆகியோர் தலைமையிலான குழுவினர் நேற்று முன்தினம் இரவு கொல்லங்கோடு அடுத்த கிராத்தூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக வேகமாக வந்த டெம்போவை நிறுத்துமாறு சைகை காட்டினர். ஆனால் டெம்போ நிற்காமல் சென்றது. இதையடுத்து அதிகாரிகள் தங்களது வாகனத்தில் அந்த டெம்போவை துரத்தி சென்றனர். சிறிது தூரத்தில் டெம்போவை நிறுத்திவிட்டு டிரைவர் தப்பியோடி விட்டார்.

இதையடுத்து அதிகாகள் டெம்போவில் சோதனை செய்தனர். அப்போது அதில் படகுகளுக்கு மானிய விலையில் வழங்கப்படும் வெள்ளை நிற மண்எண்ணெய் 36 பிளாஸ்டிக் கேன்களில் ஆயிரம் லிட்டர் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் விசாரணை நடத்தியதில் மண்எண்ணெய்யை கேரளாவுக்கு கடத்த முயன்றது தெரியவந்தது.

இதையடுத்து அதிகாரிகள் மண்எண்ணெய்யை பறிமுதல் செய்து வள்ளவிளை கிட்டங்கியிலும், டெம்போவை கிள்ளியூர் வட்ட வழங்கல் அலுவலகத்திலும் ஒப்படைத்தனர். மேலும் தப்பியோடிய டிரைவரை தேடி வருகிறார்கள்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை