தமிழக செய்திகள்

விழுப்புரத்தில் தடை செய்யப்பட்ட 1 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் 7 கடைகளுக்கு அபராதம் விதிப்பு

விழுப்புரத்தில் தடை செய்யப்பட்ட 1 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன், இதுதொடர்பாக 7 கடைகளுக்கு அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

தினத்தந்தி

விழுப்புரம் நகரில் உள்ள கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக நகராட்சி நிர்வாகத்திற்கு புகார்கள் வரப்பெற்றன. இதன் அடிப்படையில் நகராட்சி சுகாதார ஆய்வாளர் மதன்குமார் தலைமையிலான அதிகாரிகள், விழுப்புரம் எம்.ஜி.சாலை, பாகர்ஷா வீதிகளில் உள்ள கடைகளில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். இதில் 22 கடைகளில் பிளாஸ்டிக் பை, கப், தெர்மாகோல் கப் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருட்களை விற்பனைக்காக பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டு 1 டன் எடையுள்ள பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் பிளாஸ்டிக் பொருட்கள் மொத்த விற்பனை கடை, மளிகை கடை, பழக்கடை, காய்கறி கடை என 7 கடை உரிமையாளர்களுக்கு மொத்தம் ரூ.30 ஆயிரத்தை அபராதமாக நகராட்சி அதிகாரிகள் விதித்தனர். மேலும் தொடர்ந்து தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்தால் கடைகள் பூட்டி சீல் வைக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை