தமிழக செய்திகள்

7 கடைகளில் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

செங்கோட்டை நகராட்சி பகுதியில் 7 கடைகளில் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

தினத்தந்தி

செங்கோட்டை:

செங்கோட்டை நகராட்சி ஆணையாளா ஜெயப்பிரியா (பொறுப்பு) உத்தரவின்படி, தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட, ஒருமுறை பயன்படுத்தக்கூடிய நெகிழி பொருட்கள் (பிளாஸ்டிக்) பயன்படுத்தப்படுகிறதா? என்பது பற்றி அலுவலர்கள் சோதனை செய்தனர்.

இந்த சோதனையை நகராட்சி சுகாதார ஆய்வாளா பழனிசாமி தலைமையில், சுகாதார மேற்பார்வையாளாகள் முத்துமாணிக்கம், காளியப்பன் ஆகியோர் முன்னிலையில் அலுவலர்கள் மேற்கொண்டனர்.

அப்போது நகராட்சி பகுதிகளில் உள்ள கே.சி.ரோடு, காந்திரோடு, கொல்லம் ரோடு உள்ளிட்ட பகுதியில் இருக்கும் பூக்கடைகள், தெருவோர வியாபார கடைகள், டீக்கடைகள், கூல்டிரிங்ஸ் மற்றும் இதர கடைகள் என 28 கடைகளில் ஆய்வு செய்தனர்.

அதில் 7 கடைகளில் நெகிழி பொருட்கள் சுமார் 3 கிலோ பறிமுதல் செய்யப்பட்டது. இதற்காக ரூ.1,500 அபராதம் விதிக்கப்பட்டு, வசூல் செய்யப்பட்டு நகராட்சி கருவூலத்தில் செலுத்தப்பட்டது.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு