சென்னை,
ஆந்திர மாநிலம் சித்தூரை அடுத்த தமிழக எல்லைப் பகுதியான குடிவாடாவில் ஆந்திர போலீசார் வழக்கமான வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு சந்தேகத்திற்குரிய வகையில் நின்று கொண்டிருந்த காரில் போலீசார் நடத்திய சோதனையின் போது, காரில் செம்மரக்கட்டைகள் இருப்பது கண்டறியப்பட்டது.
இதையடுத்து அந்த காரில் இருந்த தமிழகத்தைச் சேர்ந்த 6 பேர் உள்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள தொழிற்பேட்டையில் செம்மரக்கட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து போலீசார் அவர்கள் சொன்ன இடத்திற்குச் சென்று ஆய்வு செய்தனர். அப்போது அங்கு ரூ.10 கோடி மதிப்பிலான 12 டன் செம்மரக்கட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.