தமிழக செய்திகள்

மணல் கடத்திய லாரி பறிமுதல்

மணல் கடத்திய லாரி பறிமுதல் செய்யப்பட்டது.

அன்னவாசல் அருகே மாங்குடி செம்மன்குளம் பகுதியில் மாங்குடி கிராம நிர்வாக அதிகாரி ராஜ்மோகன் ஆய்வு செய்தார். அப்போது அந்த வழியாக வந்த ஒரு லாரியை நிறுத்தி சோதனை செய்தார். அதில் லாரியில் மணல் கடத்தி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து லாரியை பறிமுதல் செய்து, அன்னவாசல் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, லாரி டிரைவர் திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தை சேர்ந்த முருகன் (வயது 33) என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

SCROLL FOR NEXT