தமிழக செய்திகள்

மண் கடத்திய மினி லாரி பறிமுதல்

மண் கடத்திய மினி லாரி பறிமுதல் செய்யப்பட்டது.

அரக்கோணம்

மண் கடத்திய மினி லாரி பறிமுதல் செய்யப்பட்டது.

அரக்கோணத்தை அடுத்த அன்வர்திக்கான்பேட்டை பகுதியில் ஏரி புறம்போக்கு இடத்தில் இருந்து மண் எடுத்து செங்கல் சூளைக்கு பயன்படுத்தி வருவதாக அரக்கோணம் உதவி கலெக்டர் பாத்திமாவிற்கு புகார்கள் வந்தன.

இதனையடுத்து அவரது உத்தரவின் பேரில் அரக்கோணம் தாசில்தார் சண்முசுந்தரம் தலைமயிலான வருவாய்த்துறை அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு சென்றனர்.

அப்போது அந்த வழியாக மினி லாரியில் மண் கடத்தி வந்தவர்கள் அதிகாரிகளை கண்டதும் மினி லாரியை அங்கேயே விட்டு விட்டு தப்பி ஓடிவிட்டனர்.

தொடர்ந்து அதிகாரிகள் மினி லாரியை பறிமுதல் செய்து அரக்கோணம் தாலுகா போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு