தமிழக செய்திகள்

விழுப்புரம் அருகேவீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ.2 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல்ஒருவர் கைது

விழுப்புரம் அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ.2 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

தினத்தந்தி

விழுப்புரம் அருகே மேல்முத்தாம்பாளையம் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக விழுப்புரம் தாலுகா போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தன் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்று அதிரடி சோதனை நடத்தினர். அப்போது சத்தியசீலன் (வயது 50) என்பவருடைய வீட்டில் இருந்த 13 சாக்கு மூட்டைகளை போலீசார் பிரித்து பார்த்தபோது அதற்குள் 11 ஆயிரத்து 163 பாக்கெட்டுகளில் 140 கிலோ எடையுள்ள புகையிலை பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில், இந்த புகையிலை பொருட்களை சத்தியசீலன் பதுக்கி வைத்து விழுப்புரம் பகுதியில் உள்ள பெட்டிக்கடைகளுக்கு விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து சத்தியசீலனை போலீசார் கைது செய்து அவரிடமிருந்த ரூ.2 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்