தமிழக செய்திகள்

கற்கல் கடத்திய டிராக்டர் பறிமுதல்

மோகனூர் அருகே கற்கல் கடத்திய டிராக்டரை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மோகனூர்

மோகனூர் அருகே உரிய அனுமதி இன்றி கனிம வளம் கடத்தப்படுவதாக மோகனூர் வருவாய் துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், மோகனூர் வருவாய் ஆய்வாளர் மலர்விழி தலைமையில், வருவாய் துறையினர், நாமக்கல்-மோகனூர் சாலை நெய்க்காரன்பட்டி அடுத்துள்ள மோளக்கவுண்டன்புதூர் பகுதியில் சென்று தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது வருவாய் துறையினரை பார்த்ததும் டிராக்டர் டிரைவர் வண்டியை விட்டுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். அதைதொடர்ந்து அங்கிருந்து டிராக்டரை மோகனூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். பின்னர் மோகனூர் வருவாய் ஆய்வாளர் மலர்விழி கொடுத்த புகாரின் பேரில் மோகனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேலுமணி வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு