தமிழக செய்திகள்

சபரிமலையில் 5 ஏக்கர் நிலம் வேண்டும்; கேரள அரசுக்கு சேகர்பாபு வலியுறுத்தல்

சபரிமலையில் 5 ஏக்கர் இடம் தமிழ்நாட்டுக்கு தர வேண்டும். அது தமிழக பக்தர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று சேகர் பாபு கூறினார்.

தினத்தந்தி

திருவனந்தபுரம்,

பம்பையில் நடந்த சர்வதேச அய்யப்ப பக்தர்கள் சங்கமத்தில் பங்கேற்ற தமிழக அமைச்சர் சேகர்பாபு பேசினார். அப்போது, "கேரளாவும், தமிழ்நாடும் என்றைக்கும் உறவோடு இருக்கிறது. சபரிமலையில் 5 ஏக்கர் இடம் தமிழ்நாட்டுக்கு தர வேண்டும். அது தமிழகத்தை சேர்ந்த அய்யப்ப பக்தர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். தமிழ்நாடு-கேரளா எல்லையில் உள்ள கண்ணகி கோவிலின் பிரச்சினையை பேசி தீர்க்க வேண்டும்" என்றார்.

மற்றொரு தமிழக அமைச்சரான பழனிவேல் தியாகராஜன் பேசுகையில், கேரள அரசு சபரிமலையில் மேற்கொள்ள உள்ள ரெயில்பாதை, ரோப் கார், விமான நிலையம் ஆகிய நல்ல திட்டங்களுக்கு தமிழ்நாடு எப்போதும் துணையாக இருக்கும். இந்த சங்கமத்திற்கு அழைத்த கேரள அரசுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். சுவாமியே சரணம் அய்யப்பா.. என கூறி தனது உரையை அவர் முடித்தார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து