தமிழக செய்திகள்

புதிய நிர்வாகிகள் தேர்வு

கமுதி ஊராட்சி ஒன்றியத்தில் பணியாற்றும் ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்தல் நடைபெற்றது.

தினத்தந்தி

கமுதி, 

கமுதி ஊராட்சி ஒன்றியத்தில் பணியாற்றும் ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்தல் நடைபெற்றது. இதற்கு அனைத்து பணியாளர் சங்க மாவட்ட தலைவர் முத்துமாரி தலைமை தாங்கினார். தமிழ்நாடு ஊராட்சி செயலர் சங்க மாநில இணைச்செயலாளர் ஜெயபாரதன் முன்னிலை வைத்தார். தமிழக ஊராட்சி செயலர் சங்கத்தின் மாவட்டச் செயலர் மாவிலங்கை முருகன் ஒப்புதலின் பேரில் தேர்தல் நடந்தது. இதில் கமுதி ஊராட்சி ஒன்றிய செயலர் சங்கத்தின் புதிய தலைவராக பம்மனேந்தல் குருமூர்த்தி, ஒன்றிய செயலர் என்.கரிசல்குளம் ஊராட்சி செயலர் செல்வம், ஒன்றிய பொருளாளராக கோபாலகிருஷ்ணன், துணைத்தலைவராக எம்.எம். கோட்டை ஊராட்சி செயலர் பாண்டி மற்றும் ஜெயசித்ரா. இணைச் செயலாளராக பேரையூர் ரமேஷ், ராம் ஜெயம் ஒன்றிய பிரதிநிதியாக குருசாமி, முத்து வழிவிட்டான், ஒன்றிய செயற்குழு உறுப்பினர்களாக காளிசாமி, கண்ணன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இதில் கமுதி ஒன்றியத்தில் உள்ள 53 ஊராட்சி செயலர்கள் கலந்து கொண்டனர். 

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து