மதுக்கூர் படப்பைக்காட்டில் புனித ஆரோக்கிய அன்னை ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் ஆண்டு திருவிழாவையொட்டி நேற்று தேர்பவனி நடந்தது. இந்த தேர்பவனி படப்பைகாடு ஆலயத்திலிருந்து புறப்பட்டு மதுக்கூர், மேல சூரியதோட்டம், பஸ் நிலையம், முக்கூட்டுச்சாலை வழியாக வந்து மீண்டும் ஆலயத்தை வந்தடைந்தது. இதில் மண்டலக்கோட்டை பங்குத்தந்தை ஜேசுதாஸ், தேவதானம் பங்குத்தந்தை பாங்கர் மற்றும் மண்டலக்கோட்டை அருட்சகோதரிகள், படப்பைக்காடு ஆலய பொறுப்பாளர்கள் உள்ளிட்ட திரளான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர். பாதுகாப்பு பணிகளை மதுக்கூர் போலீசார் செய்திருந்தனர்.