தமிழக செய்திகள்

தேசிய அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கான கபடி போட்டிக்கு தமிழக அணிக்கு வீரர்கள் தேர்வு தொடக்கம்

தேசிய அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கான கபடி போட்டிக்கு தமிழக அணிக்கு வீரர்கள் தேர்வு தொடங்கியது.

தினத்தந்தி

தேசிய அளவிலான சீனியர் ஆண் மாற்றுத்திறனாளிகளுக்கான 5-வது கபடி போட்டி வருகிற நவம்பர் மாதம் நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் தமிழக அணிக்காக விளையாட வீரர்கள் தேர்வு பெரம்பலூரில் உள்ள மாவட்ட எம்.ஜி.ஆர். விளையாட்டு மைதானத்தில் நேற்று தொடங்கியது. தேர்வினை தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகளுக்கான கபடி விளையாட்டு சங்கத்தின் பொதுச் செயலாளர் ரமேஷ் கண்ணா, உடற்பயிற்சி பயிற்சியாளர் வாகீத் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மாற்றுத்திறனாளிகள் ஆர்வத்துடன் வந்து கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். அவர்களில் நன்றாக கபடி விளையாடிய வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். அவர்கள் தமிழக அணிக்காக விளையாடவுள்ளனர். இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) தேர்வு நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை சங்கத்தின் பெரம்பலூர் மாவட்ட தலைவர் ரமேஷ், ஒருங்கிணைப்பாளர் கலைச்செல்வன் ஆகியோர் செய்திருந்தனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து