தமிழக செய்திகள்

தமிழக காங்கிரஸ் தலைவராக செல்வப்பெருந்தகை நியமனம்

செல்வப்பெருந்தகை தற்போது தமிழக காங்கிரஸ் சட்டமன்றக் குழு தலைவராக உள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக செல்வ பெருந்தகை நியமனம் செய்யப்பட்டுள்ளார். செல்வ பெருந்தகை தற்போது தமிழக காங்கிரஸ் சட்டமன்றக் குழு தலைவராக உள்ளார்.சட்டமன்ற குழு தலைவராக செல்வப் பெருந்தகை வகித்த பதவிக்கு ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

  நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில்,  தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவராக  செல்வப்பெருந்தகை நியமனம் செய்யப்பட்டு இருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது. புதிய தலைவர் நியமனம் உடனடியாக அமலுக்கு வருவதாக அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் அறிவித்துள்ளார்.இதுவரை தலைவராக இருந்த  கே.எஸ்.அழகிரிக்கு காங்கிரஸ் மேலிடம் பாராட்டு தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளது தொடர்பாக  பேசிய செல்வப் பெருந்தகை கூறியதாவது:- மிகவும் ஆச்சரியத்தில் உள்ளேன். இதனை தான் எதிர்பார்க்கவில்லை. தொடர்ந்து கட்சிப்பணி ஆற்றுவேன்" என்றார். 

கடந்த 2019ம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக கே.எஸ். அழகிரி தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில் 2024ம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கு முன்னர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக செல்வப்பெருந்தகை நியமிக்கப்பட்டுள்ளார்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்