தமிழக செய்திகள்

தியாக தலைவி சோனியா காந்தி; செல்வப்பெருந்தகை பிறந்தநாள் வாழ்த்து

தேசத்தின் ஒற்றுமைக்கு சோனியா காந்தி அர்ப்பணிப்புடன் செயல்படுவதாக செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்

தினத்தந்தி

காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி. இவர் இத்தாலியின் லூசியானா நகரில் 1946ம் ஆண்டு டிசம்பர் 9ம் தேதி பிறந்தார். சோனியா காந்தி 20 ஆண்டுகள் காங்கிரஸ் தலைவராக செயல்பட்டுள்ளார். அவர் தற்போது நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைவராக செயல்பட்டு வருகிறார்.

இதனிடையே, சோனியா காந்தி இன்று தனது 79வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி சோனியா காந்திக்கு அரசியல் தலைவர்கள், கட்சி தொண்டர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், சோனியா காந்திக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செல்வப்பெருந்தகை வெளியிட்ட எக்ஸ் பதிவில்,

தேசத்தின் ஒற்றுமை, பெண்கள் முன்னேற்றம் மற்றும் சமூக நீதி குறித்து இடைவிடாத அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வரும் தியாக தலைவி சோனியா காந்தி பிறந்த தினமான இன்று அவருக்கு எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்