தமிழக செய்திகள்

சின்னத்தை மாற்றி வாக்கு கேட்ட செங்கோட்டையன்

செங்கோட்டையன் இன்று ஈரோடு மாவட்டத்தில் பிரசாரம் மேற்கொண்டார்.

ஈரோடு,

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு வருகிற 23-ந்தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தல் களத்தில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர் கட்சி, தவெக என 4 முனை போட்டி நிலவுகிறது. தேர்தலை முன்னிட்டு வேட்பாளர்கள் வீதி வீதியாக சென்று தீவிர வாக்கு வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை ஆதரித்து அந்தந்த கட்சி தலைவர்களும், முக்கிய நிர்வாகிகளும் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில், தவெக தலைமை நிர்வாக குழு ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் இன்று பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பரப்புரையின் போது, தவெகவுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்கும்படி கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே பரப்புரை செய்தபோது விசிலுக்கு பதில் 'இரட்டை இலை' என்று செங்கோட்டையன் குறிப்பிட்டார். பின்னர் உடனடியாக சுதாரித்துக் கொண்ட செங்கோட்டையன், “இரட்டை இலை என்று கேட்டு கேட்டு பழகிவிட்டேன்” என்று சமாளித்தார்.