தமிழக செய்திகள்

வாலிபருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை

சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு கூறினார்.

தினத்தந்தி

சேலம்:

ஆத்தூர் அருகே வீரகனூர் புளியங்குறிச்சியை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 24). கடந்த 2018-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 23-ந் தேதி அந்த பகுதியில் 10-ம் வகுப்பு படிக்கும் 16 வயது சிறுமி தனது குடும்பத்தினருடன் வீட்டின் முன்பு கட்டிலில் தூங்கி கொண்டிருந்தாள். அங்கு வந்த ராஜ்குமார், சிறுமியை தூக்கி சென்று பலாத்காரம் செய்ய முயன்றதாக கூறப்படுகிறது. அந்த சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு பெற்றோர் ஓடி வரவும் ராஜ்குமார் அங்கிருந்து தப்பி ஓடினார். அக்கம் பக்கத்தினர் ராஜ்குமாரை மடக்கி பிடித்து ஆத்தூர் மகளிர் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜ்குமாரை கைது செய்து போக்சோ சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். இந்த வழக்கில் விசாரணை முடிந்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது.

மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற ராஜ்குமாருக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பு கூறினார். இந்த நிலையில் ஜாமீனில் வெளியே வந்த ராஜ்குமார் தலைமறைவாக உள்ளதால் அவரை பிடித்து சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்