கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

செப்., 28: பெட்ரோல், டீசல் இன்று விலை உயர்வு!

சென்னையில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு 99.15 ரூபாய், டீசல் லிட்டருக்கு 94.17 ரூபாய் என்று விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

சென்னை,

பெட்ரோல், டீசல் விலையை பொறுத்தவரையில் தினசரி விலை நிர்ணயம் என்ற நடைமுறை வந்ததில் இருந்து தொடர்ந்து அதிகரித்து வந்தது. இந்நிலையில் தமிழக அரசின் பட்ஜெட் அறிவிப்பை அடுத்து, பெட்ரோல் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைப்பு அமலுக்கு வந்தது. அதன்படி நேற்று சென்னையில் பெட்ரோல் லிட்டர் ரூ 98.96 ஆகவும், டீசல் லிட்டர் ரூ 93.93 ஆகவும் விற்பனையானது.

இந்நிலையில் சென்னையில் இன்று பெட்ரோல் விலை 23 நாட்களுக்குப்பிறகு 19 காசுகள் உயர்ந்து, லிட்டருக்கு ரூ.99.15 ஆகவும், டீசல் லிட்டருக்கு 24 காசுகள் உயர்ந்து ரூ.94.17 ஆகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.