சென்னை
சென்னை விமான நிலையத்தில் காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய மகளிர் அணி பொதுச் செயலாளர் நக்மா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நாட்டு மக்கள் அனைவரும் ஒருங்கிணைந்துதான் மாட்டிறைச்சிக்கு எதிராக போராட வேண்டும்.தனிநாடு கோருவதில் தமக்கு உடன்பாடே கிடையாது. 3 ஆண்டு சாதனையை கொண்டாட பாஜகவிற்கு தகுதியில்லை; கால்நடைகளை காப்பதாக கூறி சில அமைப்புகள் நடத்தும் தாக்குதலை ஏற்றுக் கொள்ள முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.