தமிழக செய்திகள்

பள்ளிக்கு தொடர் வெடிகுண்டு மிரட்டல்: பிளஸ்-2 மாணவரிடம் போலீசார் விசாரணை

பொன்னேரியில் பள்ளிக்கு தொடர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த பிளஸ்-2 மாணவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினத்தந்தி

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தாலுகா பஞ்செட்டியில் உள்ள வேலம்மாள் பள்ளிகளுக்கு தொடர்ந்து 2 நாட்கள் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இதனால் கடந்த 13 மற்றும் 14-ந் தேதிகளில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. பின்னர் நடத்திய விசாரணையில் வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்பது தெரிய வந்தது.

இந்த நிலையில் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது, அதே பள்ளியில் படிக்கும் பிளஸ்-2 மாணவர் என்பதும், அவர், சென்னை மாநகராட்சி அதிகாரி ஒருவரின் மகன் என்பதும் தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது. அந்த மாணவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு