தமிழக செய்திகள்

சேவை குறைபாடு: நுகர்வோருக்கு ரூ.20 ஆயிரம் நஷ்டஈடு வழங்க உத்தரவு

திருச்செந்தூரைச் சேர்ந்த ஒருவர் அங்குள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வாங்கிய கூலர் எந்திரம் பழுது ஏற்பட்டதால், அதை சர்வீஸ் செய்வதற்காக அந்த நிறுவனத்தை அணுகியுள்ளார்.

தினத்தந்தி

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரைச் சேர்ந்த அழகுமுத்து என்பவர் திருச்செந்தூர் வடக்கு ரத வீதியிலுள்ள ஒரு தனியார் எண்டர்பிரைசஸிடம் கூலர் எந்திரம் வாங்கியுள்ளார். அதில் பழுது ஏற்பட்டதால் அதில் வைத்திருந்த பூக்கள் அழுகியுள்ளது. ஆகவே சர்வீஸ் செய்து தர மேற்சொன்ன கடைக்காரரை அணுகியுள்ளார்.

ஆனால் கடைக்காரர் பழுதை முழுமையாக சரி செய்து கொடுக்கவில்லை. ஏற்கனவே பழுதடைந்த கூலரை பெற்றுக் கொண்டு புதிய கூலர் எந்திரத்தை மாற்றிக் கொடுக்குமாறு புகார்தாரர் கேட்டுள்ளார். இதற்கும் கடைக்காரர் சரியாக பதிலளிக்கவில்லை. இதனால் புகார்தாரர் அதிர்ச்சியும், தாங்க முடியாத வேதனையும் அடைந்து உடனடியாக வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். ஆனால் இதன் பின்னரும் உரிய பதில் கிடைக்காததால் மன உளைச்சலுக்கு ஆளான நுகர்வோர், தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார்.

வழக்கை விசாரித்த தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் சக்கரவர்த்தி, உறுப்பினர்கள் சங்கர், நமச்சிவாயம் ஆகியோர் தனியார் எண்டர்பிரைசஸ், கூலர் எந்திரத்தை நல்ல முறையில் சரி செய்து தர வேண்டும் என்றும், சேவை குறைபாடு மற்றும் மன உளைச்சலுக்கு நஷ்ட ஈடு தொகை ரூ.10,000, வழக்கு செலவுத் தொகை ரூ.10,000 ஆக மொத்தம் ரூ.20,000-ஐ 6 வார காலத்திற்குள் வழங்க வேண்டும். இல்லையென்றால் அந்த தொகையை செலுத்தும் தேதி வரை ஆண்டொன்றுக்கு 9 சதவீதம் வட்டியுடன் வழங்க வேண்டும் என உத்திரவிட்டனர். 

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து