தமிழக செய்திகள்

7 பேருக்கு, 7 ஆண்டுகள் சிறை தண்டனை

உலோக சிலைகளை சட்ட விரோதமாக விற்க முயன்ற 7 பேருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கும்பகோணம் கோட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.

கும்பகோணம்;

உலோக சிலைகளை சட்ட விரோதமாக விற்க முயன்ற 7 பேருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கும்பகோணம் கோட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.

சிலைகளை விற்க முயற்சி

அரியலுர் மாவட்டத்தில் உலோக சிலைகளை சட்ட விரோதமாக சிலர் விற்பனை செய்ய முயற்சிப்பதாக கடந்த 2017-ம் ஆண்டு சிலை திருட்டு தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடத்தது. அதன்பேரில் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.விசாரணையில், அாயலூர் மாவட்டம் உடையார்பாளையத்தை சேர்ந்த செல்வம்(வயது 50), மூர்த்தி(35), மனோராஜ்(33), கடலூர் மாவட்டம் நெய்வேலியை சேர்ந்த விஜி(34), சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையை சேர்ந்த மணி(34), திருச்சி மாவட்டம் துவாக்குடியை சேர்ந்த மணிகண்ட குமார்(36), குமார்(57) மற்றும் வைத்தியநாதன் ஆகியோர் உலோக சிலைகளை சட்ட விரோதமாக விற்க முயற்சி செய்வது போலீசாருக்கு தெரிய வந்தது.

8 பேர் கைது

இதனையடுத்து இவர்கள் 8 பேரையும் போலீசார் கைது செய்தனர். கைதானவர்களிடம் இருந்து திருவாச்சியுடன் கூடிய பச்சையம்மன், விநாயகர், அம்மன் உலோக சிலைகளை பறிமுதல் செய்து கும்பகோணம் கூடுதல் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

7 ஆண்டுகள் சிறை

இந்த வழக்கின் இறுதி விசாரணை நடந்து தீர்ப்பு கூறப்பட்டது. கூடுதல் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் சிவசக்திவேல் கண்ணன், குற்றம் நிரூபிக்கப்பட்ட செல்வம், மூர்த்தி, மனோராஜ், விஜி, மணி, மணிகண்டகுமார், குமார் ஆகிய 7 பேருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.5 ஆயிரம் அபராதமும், அபராதத்தை செலுத்த தவறினால் மேலும் 3 மாதம் கடுங்காவல் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பு கூறினா.இந்த வழக்கில் இருந்து வைத்தியநாதன் விடுதலை செய்யப்பட்டார். 

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்