தமிழக செய்திகள்

“வைகை ஆற்றில் கழிவுநீர் கலப்பது முற்றிலும் நிறுத்தப்படும்” - மாநகராட்சி ஆணையர் உறுதி

மதுரை வைகை ஆற்றில் கழிவுநீர் கலப்பது முற்றிலுமாக நிறுத்தப்படும் என மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் உறுதியளித்துள்ளார்.

தினத்தந்தி

மதுரை,

மதுரை வைகை ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுப்பதற்காக பந்தல்குடி வாய்க்காலில் ரூ.2.50 கோடியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வைகை ஆற்றில் கலக்கும் கழிவுநீர் சுத்திகரிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில் மதுரையில் புதிதாக விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகளுக்கான பாதாள சாக்கடை அமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

அந்த வகையில் மாநகராட்சியில் புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகளுக்கான பாதாள சாக்கடை அமைக்கும் பணிகள் மற்றும் சீர்மிகு நகர் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பணிகள் ஆகியவை நிறைவு பெற்ற பின்னர், வைகை ஆற்றில் கழிவுநீர் கலப்பது முற்றிலுமாக நிறுத்தப்படும் என மதுரை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் உறுதியளித்துள்ளார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து