தமிழக செய்திகள்

சிறுமி பாலியல் வன்கொடுமை - போக்சோவில் பெயிண்டர் கைது

திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி, சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

திருச்சி,

திருச்சியை சேர்ந்த பாண்டியன் என்பவரின் மகன் மருதுபாண்டி (வயது 26). பெயிண்டரான இவர், 16 வயது சிறுமியை காதலித்துள்ளார். சம்பவத்தன்று நள்ளிரவு சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி, பலாத்காரம் செய்ததாக தெரிகிறது.

இது பற்றி அறிந்த சிறுமியின் தாய், திருச்சி கண்டோன்மெண்ட் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் மருதுபாண்டி மீது போக்சோ பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.