தமிழக செய்திகள்

பாலியல் புகார்: முன்னாள் பா.ஜ.க. நிர்வாகி கைது

பாலியல் புகாரில் சிக்கியதால் மகுடீஸ்வரன் பா.ஜ.க.,வில் இருந்து நீக்கப்பட்டார்.

பழனி,

திண்டுக்கல் மாவட்டம் வயலூரைச் சேர்ந்தவர் மகுடீஸ்வரன் (வயது 53). இவர் புஷ்பத்தூர் ஊராட்சி தலைவரின் கணவரும், முன்னாள் பா.ஜ.க. நிர்வாகியும் ஆவார். இவர் மீது கடந்த 8 ம் தேதி பழனி அருகே சாமிநாதபுரத்தில் செயல்பட்டு வரும் அரசு நடுநிலைப்பள்ளியில் குழந்தைகளுக்கு காலை உணவுத் திட்டத்தின் கீழ் உணவு சமைத்து கொடுக்கும் பொறுப்பாளராக பணியாற்றும் புஷ்பத்தூரைச் சேர்ந்த பெண், போலீசில் பாலியல் புகார் அளித்தார். மதுபோதையில் தன்னிடம் மகுடீஸ்வரன் தகாத முறையில் நடந்து கொண்டதாக புகார் கூறியிருந்தார்.

இதனடிப்படையில் மகுடீஸ்வரன் மீது சாமிநாதபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதனையடுத்து அவர் தலைமறைவானார். தலைமறைவாக இருந்த மகுடீஸ்வரன் 4 நாட்களுக்கு பிறகு கர்நாடகாவில் கைது செய்யப்பட்டுள்ளார். மகுடீஸ்வரனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர். முன்னதாக, திண்டுக்கல் மாவட்ட பா.ஜ.க. செயலாளராக இருந்த மகுடீஸ்வரன் பாலியல் புகாரில் சிக்கியதால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்