தமிழக செய்திகள்

ஆபாச படங்களை அனுப்பி செக்ஸ் தொல்லை: இளம்பெண்ணை உல்லாசத்துக்கு அழைத்த வாலிபரை தாக்கி மண்டை உடைப்பு

ஐஸ்-அவுஸ் பகுதியில் ’இன்ஸ்டாகிராம்’ மூலம் ஆபாச படங்களை அனுப்பி இளம்பெண்ணை உல்லாசத்துக்கு அழைத்த வாலிபர் கடுமையாக தாக்கப்பட்டார்.

தினத்தந்தி

சென்னை ஐஸ்-அவுஸ் பகுதியைச் சேர்ந்த இளம்பெண்ணுக்கு அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் 'இன்ஸ்டாகிராம்' பக்கம் மூலம் ஆபாச படங்களை அடிக்கடி அனுப்பி வந்தார். ஆபாச தகவல்களையும் அனுப்பியுள்ளார். ஒரு கட்டத்தில் அந்த இளம்பெண்ணை அந்த வாலிபர், தனிமையில் சந்திக்க அழைத்தார். உல்லாசமாக இருக்க விரும்புவதாகவும் கூறினார்.

குறிப்பிட்ட வாலிபரின் இன்ப சேட்டைகளை அந்த இளம்பெண் தனது கணவரிடம் தெரிவித்தார். கணவர் கூறியதற்கிணங்க, குறிப்பிட்ட வாலிபரை நேரில் சந்திக்க வருமாறு அந்த இளம்பெண் அழைப்பு விடுத்தார். அதை உண்மை என்று நம்பிய வாலிபர், பொங்கிய ஆசையுடன் இளம்பெண்ணை நேரில் வந்து சந்தித்தார். ஆனால் அந்த வாலிபருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அந்த வாலிபர் கடுமையாக தாக்கப்பட்டார். அவரது மண்டை உடைக்கப்பட்டது. அந்த இளம்பெண்ணின் கணவரும், அவரது உறவினர்களும் அடித்து உதைத்து, வாலிபருக்கு பாடம் புகட்டினார்கள். தாக்கியதில் காயம் அடைந்த அந்த வாலிபரை போலீசார் தலையிட்டு காப்பாற்றினார்கள். அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

பின்னர் அந்த இளம்பெண் குறிப்பிட்ட வாலிபர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார். இருந்தாலும் போலீசார் அந்த வாலிபர் மீது சாதாரண சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, அவரை கைது செய்து ஜாமீனில் விடுவித்து விட்டனர்.

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு